இலங்கை செய்திகள்

கொழும்பு 12 வர்த்தக நிலையங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டம்?

கொழும்பு 12 பகுதியிலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களையும் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

குறித்த பகுதிக்கு கடந்த சில தினங்களில் சென்ற குழுவொன்று, இந்த விடயம் குறித்து ஆராய்ந்துள்ளதாக கொழும்பு 12 வர்த்தகர்கள்  தெரிவித்தனர்.

வர்த்தக நிலையங்களுக்கு சென்ற குறித்த குழுவினர், வர்த்தக நிலையங்களை முழுமையான வசதிகளுடனான இடத்திற்கு மாற்றினால் செல்ல தயாரா என வினவியுள்ளனர்.

குறித்த குழுவின் தகவல்களுக்கு அமைய, கொழும்பு 12 பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், கொழும்பு புறநகர் பகுதியொன்றுக்கு கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

கொழும்பில் அமைந்திருந்த மீன் சந்தை மற்றும் மெனிங் சந்தை ஆகியன ஏற்கனவே கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top