8 மாவட்டங்களைச் சேர்ந்த 63 பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 63 பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
கொவிட் பரவல் அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிடுகின்றது.
