இலங்கை செய்திகள்

இயக்கச்சியில் வீடொன்று முற்றுகை..! பெண் உட்பட 3 பேர் கைது

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி – பனிச்சங்கேணி பகுதியில் வீடொன்றில் வெடிபொருட்கள் இருந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பாதுகாப்பு பிரிவினர் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் உள் நுழைவதற்கு தடைவிதித்து பாரிய தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தொியவருகின்றது.

இதேவேளை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுங்கேணி பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்ட கோபி என்பவருடைய தாயார் உள்பட்ட 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறப்படுகின்றன.

Most Popular

To Top