இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 545 பேருக்கு கொரோனா!

இலங்கையில் நேற்று (01-12-2020) மேலும் 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் நெருங்கிப் பழகியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,532 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 6,593 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 17,817 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 620 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 4 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது.

Most Popular

To Top