இலங்கை செய்திகள்

கொரோனா உயர் நிலையில் இருக்கும் நாடாக இலங்கை!

அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் நோய் ஒழிப்பு மத்திய நிலையத்தால் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உயர் நிலை
யில் இருக்கும் நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித வள சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய் ஒழிப்பு மத்திய நிலை யமே இலங்கையை கொரோனா வைரஸ் தொற்று உயர்மட்டத்தில் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ளது.

அந்த அமைப்பு கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் சுற்றுப் பயணங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும், சர்வதேச விமானங்களில் பயணிப்பதற்கு முன்னும் பின்னுமான பரிசோதனைகள் தொடர்பான புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளுக்கு அமைய அவர்கள் தெரிவு செய்துள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை 4ம் மட்டத்தில் காணப்படின் அது மிகக்கூடிய அளவு எனவும், மூன்றாம் மட்டத்தில் காணப்படின் அது உயர் மட்டம் எனவும், இரண்டாம் மட்டத்தில் காணப்படின் அது மத்திய மட்டம் எனவும் முதலாம் மட்டம் எனின் அது குறைந்த மற்றும் தொற்று பதிவாகாத நிலை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினால் இலங்கைக்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆலோசனைக்கு அமைய , கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் உயர் மட்டத்தில் காணப்படுவதால் அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் – இருப்பினும் இலங்கைக்கு அவசியம் செல்ல வேண்டிய தேவை காணப்படின் மருத்துவரை நாடி கொரோனா தொடர்பான ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செல்வதற்கு முன்னரும் அதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு வருகை தந்த பின்னரும் 1 தொடக்கம் 3 நாட்கள் வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பயணத்தின் போது அந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அத்துடன், உங்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை முடிவுகள் நேர் மறையாக இருப்பின் அமெரிக்காவுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், உடனடியாக சுகாதார உதவியை நாடி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அந்த அமைப்பின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைப்பின் கணிப்புக்கு அமைய கொவிட் 19 தொற்று நிலையின் மிக உயர்நிலையான நான்காம் மட்டத்திலேயே இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்படாஸ், மொரீஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் மட்டத்தில் பெயரிடப்பட்டுள்ளன.

அதேவேளை, ஆஸ்திரேலியா,கம்போடியா, சீனா, பிஜி, ஹொங்கொங், லாவோஸ், மொங்கோலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பல நாடுகளும் முதலாம் மட்டத்தில் உள்ளதுடன், கொவிட் 19 வைரஸ் தொற்று மிகக்குறைந்த மட்டத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

Most Popular

To Top