பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி, சிங்கைநகரில் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்றிரவு வல்லிபுரக்கோயில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணபிள்ளை பிரதீபன் (வயது – 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
வல்லிபுரக் கோயில் வீதிப் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை அவதானித்த நபர் ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அவரைப் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கும்பல் ஒன்றே குறித்த இளைஞரைக் கடத்தியது எனக் குடும்பத்தாரால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
