இலங்கை செய்திகள்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம்! ஒருவர் பலி

மஹர சிறையில் குழப்பநிலை ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவர்களை தடுக்கும் போது இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Most Popular

To Top