இலங்கை செய்திகள்

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் லட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காரைநகர் மற்றும் வேலணை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனக்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் சமூக மட்டத்தில் நட மாடியதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தொற்றுக்கு உள்ளானவருடன் நேரடியாக தொடர்புபட்ட பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காரைநகர் மற்றும் வேலனை பகுதியில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் தீவக வலய பாடசாலைகள் வழமை போல் இயங்கும் எனவும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட கூட்டம் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், அந்த கூட்டத்தின் முடிவில் அதற்குரிய முடிவு எட்டப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

Most Popular

To Top