இலங்கை செய்திகள்

கோட்டா அரசு விடுத்துள்ள சவால்!

கொவிட்-19 நெருக்கடியால் தலைதூக்கிய பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியால் சகல வருமான வழிவகைகளும் முடக்கப்பட்டுள்ளன. எனினும், எத்தகைய நிலைமையிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வெட்டப்படவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று மத்தளையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் உரையாற்றினார். ஏற்றுமதி வருமானம், ஆடையுற்பத்தி சார் வருமானம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம் என்ற ரீதியில் சகல வருமானங்களும் குறைந்துள்ளன.

உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்படும் சாத்தியமும் உள்ளது. பயிர்ச்செய்கை பாழாகும் பட்சத்தில் ஆறு வகை பயிர்களுக்காக ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் என்ற ரீதியில் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.

Most Popular

To Top