இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்கு அவரது பாரியாருக்கும் கொரோனா தொற்றா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சிராந்தி ராஜபக்சவும் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மிகுந்த முன்னெச்சரிக்கை காரணமாக பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என அறிய முடிகின்றது.

பரிசோதனை முடிவுகளில் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அவர்களது மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சவும் தன்னை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

அவரது அமைச்சின் மீதான விவாதத்தின் போது நாமல் ராஜபக்ச சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

பிரதமர் கொழும்பின் தெற்கில் உள்ள ஒரு பகுதியில் உள்ளார்.

பிரதரும் அவரது மனைவியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக உத்தியோகபூர்வ நிகழ்வுகளை குறைத்துக்கொண்டுள்ளனர்.

அவரது குடும்பத்தினரும் தங்களது உத்தியோகபூர்வ நிகழ்வுகளை குறைத்துக்கொண்டுள்ளனர்.

Most Popular

To Top