இலங்கை செய்திகள்

இலங்கையை நோக்கி வரும் நிவர் புயல்! வடக்கு மக்கள் அவதானம்!

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவேஇ வடக்கு மாகாண மக்கள் மிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

நேற்றுக் காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசன்துறை கடற்பிரதேசத்திலிருந்து 325 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் சூறாவளியால் ஏற்படக் கூடிய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்கள தலைமை அதிகாரி ஜனக பண்டார தெரிவித்தார்.

இப்பிரதேசங்களில் 48 – 50 கி.மீ.வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும். வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் கடும் காற்றுடன் மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு மாகாண மக்கள் மிக அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இந்தப் பகுதியில் பதிவாகக் கூடும்.

நிவர் சூறாவளியின் தாக்கம் இரண்டு நாள்கள் வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top