இலங்கை செய்திகள்

அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…

கொரோனா அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கில ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, மறு அறிவித்தல் வரை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த சில விசேட அதிரடிப்படை உத்தியோத்தகர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது தொடர்பில் அலரி மாளிகையினால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top