இலங்கை செய்திகள்

நேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே! – இராணுவ தளபதி தெரிவிப்பு

இலங்கையில் நேற்று(21) 4 கொரோனா மரணங்கள் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய மரணங்கள் அதற்கு முதல் இரண்டு நாட்களில் பதிவான மரணங்களை அனைத்தையும் சேர்த்து நேற்று 9 மரணங்கள் என தவறாக வெளியிடப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 9 கொரோனா மரணங்கள் பதிவானதாக வெளியான தகவலை அடுத்து நான் உண்மை நிலைமையை ஆராய்ந்து பார்த்தேன்.

இதன்போது இந்த 9 மரணங்களில் ஒரு மரணம் 19ம் திகதி ஏற்பட்டதாகவும் ஏனைய 4 மரணங்கள் 20ம் திகதி இடம்பெற்றதாகவும் சுகாதார பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

எனவே, நேற்றைய தினம் உண்மையாகவே 4 மரணங்கள் தான் பதிவாகியுள்ளன.

19,20,21ம் நாட்களுக்கான மரணங்கள் அனைத்தையும் சேர்த்தே 9 மரணங்கள் பதிவாகியுள்ளதென சுகாதார பணிப்பாளர் என்னிடம் கூறினார் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் 9 மரணங்கள் நிகழ்ந்ததாக சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top