யாழ். தென்மராட்சி, மட்டுவில் பகுதியில் 22 வயது பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தந்தை, தாய் இருவரும் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் மட்டுவில் பகுதியைச் தர்மகுலராசா மாருதி என்ற 22 வயது பெண்ணின் சடலமே வீட்டின் சாமி அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பேரில் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி.தவமலர் விசாரணைகளை மேற்கொண்ட பின் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
