இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ! நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நாளை திங்கட்கிழமை அதிகாலை நீக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல மற்றும் கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து பொரளை, கோட்டை, கொழும்பு-02. வெல்லம்பிட்டி பொலிஸ் பிரவுக்குட்ட பகுதிகளிலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நாளை திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிமுதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் பொரளையில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித் தெருவில் ​வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டும் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Most Popular

To Top