இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் பயங்கரவாதி! பொன்சேகா போர்க்குற்றவாளி! மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது ஆளும் – எதிர்த் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான உரையை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கஜேந்திரகுமார் ஆரம்பித்தார்.

இதன்போது முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சரத் பொன்சேகாவை போர்க்குற்றவாளி என விளித்தார்.

தன்னை போர்க்குற்றவாளி என விளித்ததை சுட்டிக்காட்டி சரத் பொன்சேகா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பயங்கரவாதி எனக் குறிப்பிட்ட பொன்சேகா, அவர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்தும் உரையாற்றினார். அவர் உரையாற்றிய போது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறுக்கிட்டு கடும் வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

Most Popular

To Top