இந்தியச் செய்திகள்

பிரித்தானியாவில் ஒரு மாதகாலம் முடக்கல்நிலை – பாடசாலைகள் வழமை போன்று நடக்கும்….!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பரீசிலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, நாடு முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பரீசிலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பயணக்கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த முடக்கல் நிலை டிசம்பர் 2ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பப்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதுடன், Takeaways க்கு அனுமதி வழங்கப்படும், மேலும் மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியில் இருந்து ஒருவரை மட்டுமே சந்திக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 1,011,660 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 46,555 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு போராடி வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமைத்த புதிய மூன்று அடுக்கு கொரோனா எச்சரிக்கை அமைப்பு அண்மையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடுத்தர அளவு பகுதிகளில் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக அளவு பிரிவில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு உள்ளிட்டவற்றில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனிடையே, மிக அதிக அளவு பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளில் விருந்தினர்களை தங்க வைக்கவோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் 6 மாத காலத்துக்கு அமுலில் இருக்குமென்றும் 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அண்மையில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top