இலங்கை செய்திகள்

ஊடக அமைச்சில் அதிகாரி உட்பட நால்வருக்கு கொரோனா

அரசாங்க தகவல் திணைக்களத்தைச்சேர்ந்த இரண்டு ஊழியர்களும், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் இரண்டு உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் நிர்வாக தர அதிகாரி என்று தகவல் துறை பணிப்பாளர் நாலக களுவேவா தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தொற்று ஏற்பட்டபோதிலும், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் நடவடிக்கைகள் தடைப்படாது என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Most Popular

To Top