செய்திகள்

தொடர்ந்து 4வது தோல்வி! டெல்லியை பந்தாடிய மும்பை: பட்டையை கிளப்பிய இஷான் கிஷன்

துபாயில் நடந்து ஐபிஎல் தொடரின் 51 லீக் போட்டியில் டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.

துபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி-மும்பை அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட் செய்த டெல்லி அணி மும்பை வீரர்களின் பந்து வீச்சில் மளமளவென சரிந்தது.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்கள் எடுத்தார்.

சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா பர்ப்பிள் கேப்பை கைப்பற்றினார்.

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 14.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.

இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் குவித்தார். டெல்லி அணிக்கு இது தொடர்ந்து நான்காவது தோல்வியாகும்.

Most Popular

To Top