இலங்கை செய்திகள்

பூந்தோட்டம் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் பெண்ணொருவர் காயம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Most Popular

To Top