இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கிய பிக்கு: பொலிஸார் வௌியிட்ட காரணம்

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியின் சடலத்தினை மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த தேரரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Most Popular

To Top