இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று முதல் கடுமையாகும் தனிமைப்படுத்தல் சட்டம்

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 221 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் 1480 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 218 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 14ஆம் திகதி தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அவகாச காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வாறான குற்றச்சாட்டில் 39 பேர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top