இலங்கை செய்திகள்

நாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளைய தினம் நடைபெறவுள்ள கணக்கியல் பாடத்தின்போது பரீட்சார்த்திகளுக்கு நிரல்படுத்தப்படாத கணிப்பானை (Calculater) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

எனினும் கைக்கடிகாரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு தொடர்பு சாதனங்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு செல்வது தடைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Most Popular

To Top