இலங்கை செய்திகள்

மத வழிபாடுகளில் 50 பேர் பங்குபெற வேண்டுகோள்

மத வழிபாடுகள் தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் உச்சபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை 50ஆக பேண வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமி தினம் என்பதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவொரு நிகழ்வும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரையில் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார சட்டதிட்டங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுததல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Most Popular

To Top