கேகாலை – குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.
குறித்த பெண் தனக்கு பிறந்த 21 நாட்களேயான ஆண் குழந்தையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொடைக்கு வந்து பேலியகொட மீன் சந்தையில் தொழில் புரியும் தனது உறவினர் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்துள்ளார்.
இதன் பின்னர் குடாவெல்ல பிரதேசத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் தொழில் புரியும் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியானதை அடுத்து இந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
