இலங்கை செய்திகள்

இந்து சமய விவகார ஆலோசகர்கள் இருவரை நியமித்த பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் இந்து சமய அமைச்சுக்குப் பொறுப்பாகவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களே நியமித்துள்ளார்.

அதன்பிரகாரம், ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோரே ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தங்களது நியமனக் கடிதங்களை நேற்றைய தினம் பெற்றுக் கொண்டனர்.

Most Popular

To Top