இலங்கை செய்திகள்

கொரோனாத் தொற்று தீவிரம்! நேற்றும் 586 பேர் அடையாளம்

இலங்கையில் நேற்று 586 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 791 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்து 630 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 ஆயிரத்து 142 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்று சந்தேகத்தில் 435 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று வரை 4 இலட்சத்து 80 ஆயிரத்து 838 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top