நாட்டின் 23 மாவட்டங்களில் மினுவாங்கொடை மற்றும் பெஹலியகொட கொவிட்-19 கொத்தணிகளைச் சேர்ந்த தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்த இரண்டு கொவிட்-19 கொத்தணிகளைச் சேர்ந்த தொற்றாளிகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கொத்தணிகளைச் சேர்ந்த அதிகளவான தொற்றாளிகள் மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இந்த இரண்டு கொத்தணிகளைச் சேர்ந்த கொவிட் – 19 தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 2908 தொற்றாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 1584 தொற்றாளிகளும் பதிவாகியுள்ளனர்.
