இலங்கை செய்திகள்

கொரோனா மரணங்களுக்கு சூழல் மாசும் காரணம்! ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களுக்கு சூழல் மாசடைந்திருப்பதும் காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனி மற்றும் சைப்ரஸ் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் 15 வீத மரணங்கள் சூழல் மாசடைவால் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களில் 27 வீதமான மரணங்கள் சூழல் மாசடைவால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சூழல் மாசடைந்துள்ளமை காரணமாக அனைத்து நபர்களின் எதிர்பார்த்துள்ள ஆயுள் காலத்தில் இரண்டு ஆண்டுகள் குறைவதாக இதற்கு முன்னர் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top