இலங்கை செய்திகள்

கொரோனா பரவல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் மேலும் கூறுகையில்,

கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதனையும் செய்ய முடியாது.

இந்த தருணத்தில் கட்சி, இன, மத பேதங்களைக் களைந்து கொரோனா ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்கள் சுகாதார வழிமுறைகளை கிரமமாக பின்பற்றினால் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக போராட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்ர்.

அத்துடன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக படையினர், பொலிஸார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், மக்கள் அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டம் எனவும் அவர் கோரியுள்ளார்.

Most Popular

To Top