இலங்கை செய்திகள்

முத்துராஜவெல ஈரநில விவகாரம்! சுற்றாடல் அமைச்சர் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு விடுத்துள்ள உத்தரவு

நீர்கொழும்பு – முத்துராஜவெல ஈர நிலப்பகுதிக்கு கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக குறித்த தடையுத்தரவை விதிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வுத்தரவை மீறி ஈரநிலப்பகுதிக்குள் நுழையும் வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்துராஜவெல ஈரநிலத்தை கொங்கிரீட் துண்டுகள், பழைய டயர்கள் மற்றும் பல குப்பைகளை கொண்டு சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Most Popular

To Top