இலங்கை செய்திகள்

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை சுகாதார பரிந்துரைகளுக்கமைய ஏற்றுமதி நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவிப்பு

நாட்டில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்றுமதி தொழில்களின் செயல்பாடுகள் தடையின்றி இருப்பதை உறுதி செய்ய இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை உதவுவதாக அறிவித்துள்ளது.

கொவிட் – 19 தொற்று நிலைமையை நிர்வகிக்க, நாட்டிற்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி தொழில்களில் சுகாதார அமைச்சினால் 2020 ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பரிந்துரைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதி நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஏற்றுமதி தொழில்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத்தகவல்கள் மற்றும் உதவிகள் தேவைப்படுவோர் 0112300710, 071 440 6119 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என ஏற்றுமதிச் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Most Popular

To Top