இலங்கை செய்திகள்

யாழ். கோப்பாயில் கொரோனா வைத்தியசாலை!

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

இந்தவகையில் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் ஒரு வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு வைத்தியசாலையாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியும் மாற்றப்படவுள்ளது.

இதற்காகத் தற்போது கல்வியற் கல்லூரியில் இயங்கும் கொரோனாத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 217 பேரும் நாளை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு கட்டடம் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவ்வாறு கையளிக்கப்படும் கட்டடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும், கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதை வைத்திய அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Most Popular

To Top