இலங்கை செய்திகள்

சவேந்திர சில்வா மீதான பயணத் தடை தொடரும்!மைக் பொம்பியோ உறுதி!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரி வரும் நிலையில், அதை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ நேற்று நிராகரித்தார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடை தொடரும் என்று கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மைக் பொம்பியோ தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரமே பயணத் தடை விதிக்கப்பட்டது. சட்ட ரீதியாக அது சரியானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்.

அவருடைய பயணத் தடையை விலக்கிக் கொள்வது குறித்து உடனடியாகப் பரிசீலிக்கப்படாது-என்றார்.

Most Popular

To Top