இந்தியச் செய்திகள்

இந்தியத் தூதுவர் – சம்பந்தன் நேற்று கொழும்பில் பேச்சு!

கொழும்புக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பிக்கும் இடையில் தூதுவரின் கொழும்பு உத்தியோகபூர்வ இல்லமான “இந்தியன் ஹவுஸில்’ நேற்று மாலை சினேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்பட பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் இருவரும் பேசினர்.

இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் நேற்றிரவு தகவல் வெளியிடுகையில் அவர் தெரிவித்தவை வருமாறு: –

முக்கிய விடயங்கள் குறித்துப் பேசினோம். தமிழர் தரப்பில் கூற வேண்டிய விடயங்களை நான் தெளிவுபடுத்தினேன்.

அரசியல் தீர்வு முயற்சிகள், புதிய அரசமைப்பு உருவாக்கம், அரசமைப்பின் 20வது திருத்தத்தை அடுத்து ஏற்பட்டுள்ள விடயங்கள், இரு நாட்டு உறவுகள், இந்தியப் பிரதமருடன் தமிμக் கூட்டமைப்பு பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசினோம். தொடர்ந்தும் பேசுவோம். – என்றார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய உதவித் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள வேண்டும் என இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் எனவும் அறிய வந்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் இந்திய ரூபா 100 கோடி (இலங்கைப் பணத்தில் சுமார் 250 கோடி ரூபா) செலவில் 12 அடுக்கு மாடி கலாசார மண்டபக் கட்டடத் தொகுதி ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் திறப்பதற்கு தயாராகவே உள்ளது. அதனை அமைத்துத் தந்த இந்தியப் பிரதமர் மோடி நேரில் வருகை தந்து அதனைத் திறக்கும் நிகμவிலும் பங்குபற்ற வேண்டும் எனக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தனது விருப்பத்தை இந்தியத் தூதரிடம் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவரின் விருப்பத்தினை உரிய தரப்பிற்கு அனுப்புவதாக உயர் ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.

Most Popular

To Top