இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் குடியிருப்புக்குள் வந்த கடல் நீர்

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கடல்நீர் தடுப்பணைகள் சேதமடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ள நிலையில் சுமார் 87 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் நோில் சென்று பார்வையிட்டுள்ளார். பருவ பெயர்ச்சி தாக்கத்தின் காரணமாக கல்லுண்டாய் பிரதேசத்தில்

கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளமையினால் J/35, J/36 ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 87 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ் அனர்த்த நிலையினை அறிந்து மாவட்ட அரசாங்க அதிபர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்,

வலி தெற்கு பிரதேச தவிசாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு இராணுவத்தினருடன் கலந்துரையாடி குறித்த மக்களிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top