இலங்கை செய்திகள்

பணம் மற்றும் ஹெரோயினுடன் நபரொருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் 880 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் பிரதான வியாபாரி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிறைந்துரைச்சேனை பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 37 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 880 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Most Popular

To Top