இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இடைநிறுத்தம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அமர்வுகளை இடைநிறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவலை அடுத்தே ஆணைக்குழு தமது செயற்பாடுகளை நேற்று இடைநிறுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பிரதிநிதியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாளை மறுநாள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை சாட்சியம் அளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top