அதிகாலை வேளை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் குழு கத்திமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி பதினைந்து பவுண் நகை, ஒன்றரை லட்சம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
இந்தத் துணிகர சம்பவம் நேற்றுஅதிகாலை 4 மணியளவில் வடமராட்சி, கரணவாய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
நேற்றையதினம் அதிகாலை வேளை வீட்டுக்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்ப அங்கத்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்த பணம் நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
