இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 8 பேர் மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 156 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8870 ஆக உயர்ந்துள்ளது.

Most Popular

To Top