இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் கீப்பிங் மூலம் பல்வேறு சாதனைகளை செய்துள்ள சங்ககாராவுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டடும் சங்ககாராவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்து மழையை சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
விளையாட்டில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சங்ககாரா சிறந்த மனிதர் எனவும் கிரிக்கெட் உலகின் கடவுள், இனம் மதம் மொழிகளை கடந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர், அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட மாமனிதர் எனவும் ரசிகர்கள் பலரும் தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
