இலங்கை செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நபருடன் தொடர்பை பேணியவர்கள் விபரம் திரட்டப்பட்டு வருகின்றன.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளதுடன், சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார்.

பேலியகொடை கொரோனா கொத்தணி பரவலையடுத்து இவரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபரின் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவு இன்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இதன்பின்னர் அக்கரப்பத்தனை நகரம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை லிந்துலை பகுதியிலும் பலரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொழும்பு உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Most Popular

To Top