இலங்கை செய்திகள்

அனைத்து அருங்காட்சியகங்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அருங்காட்சியகங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் கொவிட் – 19 தொற்று நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறு அருங்காட்சியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த அருங்காட்சியகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஸ்ட பேராசிரியர் காமினி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top