இலங்கை செய்திகள்

ரிசாட்டின் பிணை மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அண்மையில் ரிசாட் பதியூதீனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ரிசாட்டினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரிசாட் பதியூதீனினால் சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதன்போது அவரது விளக்கமறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Most Popular

To Top