பெஹலியகொட மீன் சந்தையில் கொவிட் – 19 தொற்று தொடர்பில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்திய உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் சுகாதார பிரிவைச் சேர்ந்த ஒன்பது உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் ருவான் விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகிய உத்தியோகத்தர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 18ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் கொழும்பு நகரில் 5368 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 937 பேர் கொவிட் – 19 தொற்றாளிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காகியவர்களில், பெஹலியகொட மீன் சந்தையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உதவியவர்கள் சிலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
