இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் ரகசியமாக உலவிய கொரோனா நோயாளி; மக்களே உஷார்

மட்டக்களப்பில் ரகசியமாக உலவிய வாழைச்சேனையை கொரோனா தொற்றாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தொற்றாளர் மட்டக்களப்பு தனியார் வைத்திய சாலையில் பணியாற்றும் மருத்துவர் உமாகாந்தனிடம் வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் அந்த நோயாளிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவர் உமாகாந்தன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் பல ஊழியர்கள் பணிபுரியும் அதேவேளை அங்கு வந்து சென்ற நோயாளிகளும் இது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top