இலங்கை செய்திகள்

நேற்றும் 541 பேருக்கு தொற்று

இலங்கையில் நேற்று 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 464 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 130 பேர் குணமடைந்துள்ளதுடன் இதுவரை 3 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

16 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.

Most Popular

To Top