நாட்டில் மேலும் 261 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அதன்படி திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் இதுவரையில் 4,939 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனூடாக, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையானது 8,413ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 4,464 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 3,933 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தப்பது.
