நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று மட்டும் 351 பேர் இலக்காகியுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு இலக்கானவர்களின் பெரும்பாலானவர்கள் திவுலுப்பிட்டி, பேலியகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 7872 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், அதிக தொற்றாளர்களின் சர்வதேச பட்டியலில் 117வது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
இதேவேளை, 537 பேர் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3,803 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
4,054 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவிர, கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
