இந்தியச் செய்திகள்

மோடி-கூட்டமைப்பு சந்திப்பு தாமதமாகும

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடக்கவிருந்த சந்திப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிக ஆர்வமாக இருந்தார்.

ஆயினும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த நேரத்தில் சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடனான பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இந்தப் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆயினும் இரு நாடுகளிலும் தலைதூக்கியுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்தோடு பிரதமர் நரேந்திர மோடியுடன் என்ன விடயம் தொடர்பில் கலந்துரையாடுவது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Most Popular

To Top